ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து மீன்பிடிக்காகப் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் ஜூலை 8ஆம் தேதி, 1974 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா, இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார்.
சபரிமலை: யானை மிதித்து பலியான தமிழர்!
இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு இருந்த பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இலங்கை அரசு சார்பாகக் கச்சத்தீவில் புதிய தேவாலயம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் என். வேதநாயகன் தலைமையில் கச்சத்தீவு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. பின், செய்தியாளர்களிடம் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் என். வேதநாயகன் கூறியதாவது:
ச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடக்கவிருக்கும் திருவிழாவிற்கான தேதிகளை யாழ்பாணம் மாவட்ட ஆட்சியர் வேதநாயகம் வெளியிட்டார்